Credit : India Mart
நட்சத்திர பழத்தின் தாயகம் மலேசியா என்பதால் இந்தியாவில் மிக குறைந்தளவே பயிரிடப் படுகின்றன. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, மியான்மார், இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிக அளவு விளைவிக்கப்படுகிறது. இப்பழமானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் செழித்து வளரும் தன்மை கொண்டது. 6-9 மீ உயரம் வரை வளரும் இயல்புடைய இப்பழம் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும்.
மரங்களில் விளையும் இந்த பழமானது, பயிர் செய்து 3 முதல் 4 வருடங்களில் பலன் தரத் துவங்கும். தொடர்ந்து 40 வருடங்கள் வரை பலன் தர கூடிய இம்மரத்தில் இளஞ்சிவப்பு நிற மணி வடிவ பூக்கள் பூக்கும். பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தில் நீள் வட்டவடிவில் ஐந்து விளிம்புகளுடன் காணப்படும். இதன் எடை 60 முதல் 130 கிராம் வரை இருக்கும். சதைப்பகுதி நீர்சத்து நிறைந்து புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். இதனுள் 10 முதல் 12 பழுப்பு நிற விதைகள் இருக்கும். இப்பழத்தினை குறுக்குவாக்கில் வெட்டும்போது ஐந்து விளிம்புகளை உடைய நட்சத்திரம் போன்று காணப்படுவதால் நட்சத்திர பழம் என்று அழைக்கப்படுகிறது.
அடங்கியுள்ள சத்துக்கள்
இப்பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ,சி,இ, பி1 (தயாமின்), பி2 (ரிபோஃளோவின்), பி3 (நியாசின்), பி6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் போன்றவைகளும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்களும், கார்போஹைட்ரேட், புரதச் சத்து, நார்ச்சத்து, நீர்சத்து, குறைந்த அளவு எரிசக்தி ஆகியவையும் காணப்படுகின்றன.
நல்ல செரிமானத்திற்கு
இப்பழத்தில் காணப்படும் அதிகளவு நார்ச்சத்து உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இப்பழத்தினை உண்டு மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
தாய்பால் சுரக்க
பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது. எனவே பிரசவித்த தாய்மார்கள் இப்பழத்தினை உண்டு பால்சுரப்பிற்கு இயற்கை வழியில் நிவாரணம் பெறலாம்.
சீரான இதய செயல்பாட்டிற்கு
இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைச் சீர்செய்து சீரான இதய செயல்பாட்டிற்கு வழிசெய்கிறது. இப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சோடியத்தின் அளவினை வரைமுறைப்படுத்தி உடலின் இதயம் உட்பட எல்லா தசைகளின் செயல்பாட்டினையும் சீராக்குகிறது. சீரான இதய தசை செயல்பாட்டினால் இரத்த ஓட்டம் சீராகி உடல் நலம் பேணப்படுகிறது.
உடல் எடை குறைப்பிற்கு
Credit : Organic Farming
புற்று நோயிலிருந்து பாதுகாப்பு
சருமப்பாதுகாப்பு
இப்பழத்தில் காணப்படும் விட்டமின் சி-யானது (Vitamin C) சருமத்தில் காணப்படும் கழிவுகளை வெளியேற்றி சருமத்தினைப் பொலிவுறச் செய்கின்றது. மேலும் இப்பழத்தினை உண்ணும்போது சருமானது நீர்சத்துடன் சுருக்கங்கள், பருக்கள் இன்றி பளபளப்பாக இருக்கும். எனவே இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சருமப் பாதுகாப்பினைப் பெறலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெற
Credit : Dinakaran
இப்பழத்தில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகளவு காணப்படுகிறது. எனவே சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இப்பழத்தினை தவிர்ப்பது நலம்.
Shipping Cost | ₹0 |
Shipping Time | Ready to ship in 4-7 Business Days |
Location |
No reviews found.
No comments found for this product. Be the first to comment!