இட்லி பூ - வெட்சி பூ (Ixora) Red

By admin
0
(0)
3 6430
130
In Stock
New

வெட்சி பூ பெருவாரியான மக்களால் இட்லி பூ எனவும் அழைக்கப்படுகிறது. குல்லை, செச்சை, செங்கொடுவேரி, சேதாரம் போன்ற பல பெயர்களால் அறியப்படுகிறது. அழகுக்காக வளர்க்கப்படும் வெட்சி செடியின் பூ, இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.
 

சளியை கரைத்து வெளியேற்றும். ரத்தம் கலந்து சளி வெளியேறும் பிரச்னையை தீர்க்க கூடியது. வெட்சி செடியின் இலைகளை அரைத்து போடும்போது தோல்நோய்கள் குணமாகும். கொப்புளங்கள், அரிப்பு, தடிப்பை சரிசெய்யும். அடிபட்ட இடத்தில் தசை  நசுங்கி ரத்தநாளங்கள் சீர்கெட்டு போகும் நிலையில் மேல்பற்றாக போடும்போது புண்கள் விரைவில் ஆறிப்போகும்.  வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. 

 

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் நீர்விடாமல் அரைத்த வெட்சி பூவை  சேர்த்து தைலமாக காய்ச்சவும். இதை வடிகட்டி பூசிவர தோல்நோய்கள் குணமாகும். தோலில் ஏற்படும் அரிப்பு சரியாகும். தலையில் தேய்த்து குளித்துவர பொடுகை போக்கி முடிக்கு வளத்தை கொடுக்கிறது.

 

வெட்சி பூ உடல் சோர்வு, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதி, கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை  இருக்கும் போது வெட்சிப்பூ தேநீரை காலை, மாலை என இருவேளைகள் குடிக்க வேண்டும்.

 

பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கிய வெட்சி பூவை பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். கருப்பையில் ஏற்படும் புண்களை ஆற்றும். புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுப்போக்கை நிறுத்தும் மருந்தாக இது விளங்குகிறது.

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!