நாட்டு மாதுளை செடி

By admin
0
(0)
1 4205
150
Out of Stock
New

மாதுளை என்றால், 'வெள்ளை மாதுளை' என்று அழைக்கப்படும் நாட்டு மாதுளைதான். சித்தர்களின் பாடல்களில், `மாது உளம் பழம்’என்று குறிப்பிடப்பட்டுள்ளது. `மாதர்களுக்கு உகந்த பழம்’ என்று அதன் பெயரிலேயே அடங்கியிருக்கிறது. மாதுளைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

மாதுளையைப் `பழங்களின் ராணி’ என்கிறார்கள். ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன என்பதுதான் அதற்குக் காரணம். மருத்துவமனையில் தொடங்கி மணவறை வரை மாதுளைக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கிறது. பண்டைய எகிப்து நாகரிகத்தில், மாதுளையை செழிப்புக்கான குறியீடாகக் குறிப்பிட்டுள்ளனர். கருத்தரித்தல் மற்றும் வயிற்றுப் பிரச்னைகளுக்கு அருமருந்தான மாதுளை, வருடம் முழுவதும் விளையக்கூடியது. இந்தியா வெப்ப மண்டல நாடு என்பதால்தான் மாதுளையைத் தனதாக்கிக்கொண்டிருக்கிறது.

மாதுளை
மாதுளை
pixabay.com

மாதுளையில் கணேஷ், காபூல், மிர்துளா, பஹாவா என்று பல ரகங்கள் உள்ளன. ஆனாலும், பெரும்பான்மையான மக்களுக்குப் பிடித்தது, 'கணேஷ்' வகை மாதுளையே. இதை வெள்ளை மாதுளை அல்லது நாட்டு மாதுளை என்கிறார்கள். சித்த மருத்துவம் பரிந்துரைப்பதும் இந்த வகை மாதுளைதான் என்றாலும், தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் காணப்படுவது காபூல் ரக மாதுளையே.

இந்தியாவில், வருடத்துக்கு சுமார் 28 லட்சம் டன் மாதுளைகள் விளைவிக்கப்படுகின்றன. இதில், மகாராஷ்டிர மாநிலம் முன்னணியில் இருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு மாதுளைகள் பெருமளவில் விற்பனைக்கு வருகின்றன. இவற்றில் 90 சதவிகிதம், காபூல் ரக மாதுளைதான். வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நாட்டு ரக மாதுளைகள்.

மாதுளை
மாதுளை
pixabay.com

எளிதில் வெடிப்பு விழுந்து அழுகிவிடும் என்பதாலும் பெரும்பாலானோர் கண்ணுக்கு அழகான சிவந்த காபூல் ரக வகை மாதுளையையே விரும்பி வாங்குவதாலும், நாட்டு ரக மாதுளையை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. இதனாலேயே, தமிழகத்தில் நாட்டு மாதுளைப்பழங்கள் வகை, மாதுளையாக மாறிக்கொண்டிருக்கின்றன. `பார்வைக்கு அழகாக, ஆப்பிள் போல இளஞ்சிவப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் காபூல் ரக மாதுளை ஆரோக்கியத்துக்குக் கேடு’ என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க, வெள்ளை மாதுளை உதவும். இந்தப் பழத்திலுள்ள துவர்ப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண்ணை ஆற்றும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும், ரத்தசோகையைப் போக்கும்.
சித்த மருத்துவர் தே.வேலாயுதம்

“அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்...’ என்பது சித்தர்களின் வாக்கு. அதன்படி, அந்தந்தப் பகுதிகளில் விளையக்கூடிய காய்கறிகளை அந்தப் பகுதி மக்கள் உண்ண வேண்டும். அப்படித்தான் இயற்கை நம்மைப் படைத்திருக்கிறது. அதற்குக் காரணம், அந்தப் பகுதியின் தட்பவெப்ப சூழல்தான். இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள், பழங்களை உண்டு வாழும்போது, நோய் நொடியின்றி வாழலாம்.

மாதுளை
மாதுளை
pixabay.com

மாதுளை என்றால், 'வெள்ளை மாதுளை' என்று அழைக்கப்படும் நாட்டு மாதுளைதான். சித்தர்களின் பாடல்களில் `மாது உளம் பழம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. `மாதர்களுக்கு உகந்த பழம்’ என்று அதன் பெயரிலேயே அடங்கியிருக்கிறது. மாதுளைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. கருப்பையை வலுவாக்கும் என்பது அதன் சிறப்புக் குணம். மற்ற பழங்களுக்கும் மாதுளைக்கும் வேறுபாடு உண்டு. இதில், துவர்ப்புச் சுவையோடு இனிப்பும் கலந்திருக்கும். இதிலுள்ள துவர்ப்பே மாதுளையின் சிறப்பு. சித்த மருத்துவம், `ஆறு சுவைகளில் துவர்ப்புச் சுவையானது உடலை உரமாக்கக்கூடியது’ என்று குறிப்பிடுகிறது. இந்த மாதுளையை விதையுடன் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும்.

சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைக்க, வெள்ளை மாதுளை உதவும். இந்தப் பழத்திலுள்ள துவர்ப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப்புண்ணை ஆற்றும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும், ரத்தசோகையைப் போக்கும். பெண்களின் மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெள்ளை மாதுளைக்கு உண்டு.

சித்த மருத்துவர் தே.வேலாயுதம்

மாதுளம் பழத்தின் தோலுக்கு அடியில் மஞசள் நிறத்தில் காணப்படும் ஜவ்வுபோன்ற பகுதி, மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. இதைக் காயவைத்து, பொடியாக்கிப் பயன்படுத்தலாம். சீதபேதி, கழிச்சலைக் கட்டுப்படுத்தும்.

நம்மூரிலுள்ள வெள்ளை மாதுளை, அழகிலும் நிறத்திலும் சற்று குறைவாக இருந்தாலும், அவைதான் நாம் சாப்பிட ஏற்றவை. அந்தப் பழங்களில் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. உடல் நலத்துக்கும் உகந்தது.
சித்த மருத்துவர் தே.வேலாயுதம்

ஆனால், இன்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட காபூல் மாதுளையே பலரையும் ஈர்ப்பதாக இருக்கிறது. அதற்குக் காரணம், அது செக்கச் சிவந்த பரல்களைக் கொண்டிருப்பதுதான். சில நேரங்களில், இவ்வகையான மாதுளைகளில் செயற்கையாக நிறமூட்டுவதற்காக ரசாயன ஊசி போடப்படுகின்றன. இந்த வகை மாதுளையை வெட்டும்போது, அதிலிருந்து ஒரு வகையான நிறமி வெளியேறும். இது, உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடியது.

மாதுளை
மாதுளை
pixabay.com

இந்த செயற்கை நிறமிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உண்டு. இவ்வகையான மாதுளையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் இனிப்புச்சுவை அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல இந்தப் பழங்களை அதிகமாக உட்கொண்டால், வயிற்றுப்புண் ஏற்படலாம்.

நம்மூரிலுள்ள வெள்ளை மாதுளை, அழகிலும் நிறத்திலும் சற்று குறைவாக இருந்தாலும், அவைதான் நாம் சாப்பிட ஏற்றவை. அந்தப் பழங்களில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. உடல் நலத்துக்கும் உகந்தது. அத்தகைய வெள்ளை மாதுளை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும். இவ்வகையான மாதுளைகள் மிகக் குறைவாகவே பயிரிடப்படுகின்றன. இவை அதிகரிக்கப்பட வேண்டும்.

மாதுளை
மாதுளை
pixabay.com

மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாதுளை தடை செய்யப்பட வேண்டும். அதற்கு வேளாண் விஞ்ஞானிகள், விவசாயம்குறித்த ஆய்வில் ஈடுபடுவோர், சமூக ஆர்வலர்கள் இதை ஒரு விவாதப் பொருளாக மாற்றி, அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும். பி.டி கத்திரிக்காயைப்போல ஆபத்தானது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாதுளை. அதைத் தவிர்த்து, ஆரோக்கியமான வெள்ளை மாதுளையை உண்போம்!” என்கிறார், சித்த மருத்துவர் தே.வேலாயுதம்.

நன்றி விகடன்

 

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!