பூனை மீசை மூலிகை ( சீரக துளசி)..!
சிறுநீரக செயலிழப்பு பிரச்சனைக்கும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பூனை மீசை மூலிகை , நாளுக்கு நாள் அதிகரித்து வரும் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் நம் உண்ணும் உணவுகள் விசமாகிக்கொண்டுஇருக்கின்றன..
நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்கள் நம் உடம்பில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன , ஒரு கட்டத்தில் அதனால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருகின்றன,
ஆனாலும் நாம் தினமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளைவாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளோம் , முடிந்தவரை அந்த நட்சு போருட்களின் தாக்கத்தை குறைத்து நம்மை பாதுகாத்து கொள்வதே இப்போது இருக்கும் தற்காலிக வழி..
இதற்கு தினமும் பூனை மீசை தேநீர் அருந்துவது நல்ல பயனளிக்கும்..
இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி ரத்தத்தினை சுத்தம் செய்யலாம் மேலும் இதன் பயன்கள் பல.
பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை (ஜாவா டீ ) என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்குஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரமாக உள்ளது .
மலேசியா, சீனா , இந்தோனேசிய ஜப்பானில் இது உடல் ஆரோக்கியத்துக்கான தேநீராக தினமும் அருந்தப்படுகிறது .
மேலும் இந்த மூலிகை சிறுநீர் பெருக்கியாக செயல் படுகிறது .
தேவை இல்லாத உடலில் உள்ள கெட்ட நீரை உடலில் உள்ள தேவை இல்லாத உப்புக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது, இதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது .
சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது,
கட்டுப்பாடில்லா சர்க்கரை நோய்,கட்டுப்பாடில்லா இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிறப்பாக செயல்படுகிறது,
சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக கோளாறுகள், சிறுநீரக கற்கள், கீல்வாதம், வாத நோய், மற்றும் பிற நோய்களுக்கான அற்புத மூலிகை பூனை மீசை மூலிகை .
இது கிரீன் டீ போல தினசரி பயன்படுத்தலாம் நோய் இலாதவரும் பயன்படுத்தலாம் .
இதை ஐரோப்பாவில் கிட்னி டீ மற்றும் ஜாவா டீ என்ற பெயரில் பயன்படுத்துகிறார்கள்.
தினசரி 2 வேளை பயன்படுத்துவதால் மேற்கண்ட அனைத்து நோய்களில் தாக்கத்தினை குறைக்கலாம்.
சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது , மேலும் கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது.
இந்த டீ தயாரிக்க 1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .
சிறுநீரக செயல் இழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள யூரியா ,கிரியாடினின் அளவு அதிகமாயிருந்தால் சராசரி அளவை நோக்கி குறைந்து வரும்.
அதாவது உப்பு சத்தின் அளவு இரத்ததில் அளவு மட்டுப்படும். சிறுநீரக கற்களை கரைப்பதில் சிறந்தது .
தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.
#Health tips # Siddha # பூனை மீசை மூலிகை
Shipping Cost | ₹0 |
Shipping Time | Ready to ship in 4-7 Business Days |
Location |
No reviews found.
No comments found for this product. Be the first to comment!