கொழுப்பை கரைக்கும் கொடி எலுமிச்சை

By admin
0
(0)
6 3809
350
Out of Stock
New

அரிதாகிவிட்ட கொடி எலுமிச்சை

 கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களில் விளைந்த மருத்துவ குணமிக்க கொடி எலுமிச்சை பழங்கள் அரிதாகிவிட்டது. கடந்த காலங்களில் மலைப்பிரேதசத்தில் விளைவிக்கப்பட்ட மரங்கள் வரிசையில் "கொடி லெமன்' என்றழைக்கப்பட்ட மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளது. வீடுகளின் மரங்கள் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது. மருத்துவகுணம் மிக்க இப்பழங்களை வீடுகள் தோறும் ஊறுகாய் தயாரித்து சாப்பிட்டு வந்துள்ளனர். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதாக நம்பி பயன்படுத்தி வந்துள்ளனர்.
கொடைக்கானலில் ஒரு சில இடங்களில் மட்டுமே மரங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றது. கசப்பு சுவை கொண்ட இப்பழம் ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது ஒரு சில பழக்கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பள்ளங்கி கோம்பை பகுதிகளில் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ 40 க்கு விற்கப்பட்டு வருகின்றது. ஒருவித கசப்பு சுவையினால் நோயாளிகள் இப்
பழத்தை விரும்புகின்றனர். கொடைக்கானலை சேர்ந்த ஐசக் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மருத்துவகுணமிக்க இப்பழத்தை நோயாளிகள் ஆர்வத்தோடு வாங்கி செல்வர். கொடி லெமன் மரங்கள் தற்போது முற்றிலும் அழிந்துள்ளது. மீண்டும் மரங்கள் வைக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்றார்.

Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!