Dragon fruit Plant - டிராகன் பழம் செடி

0
(0)
0 6925
200
Out of Stock
New

நன்மை 1: இரத்த சர்க்கரை/ நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

இந்நாட்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் நோயாக கருதப்படுவது சர்க்கரை நோய் ஆகும்; இரத்த சர்க்கரையின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் தீவிரமானது – இதை சரியான  அளவில் வைக்க பல மக்கள் ‘சர்க்கரை இல்லா’ மற்றும் ‘கார்போஹைட்ரேட் இல்லா’ உணவுகளை உட்கொண்டு வருவதுண்டு. இது இனிப்புகளை விரும்பும் மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருக்கலாம்.

இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டிராகன் பழத்தில் உள்ள பாலிஃபினால்கள், கரோட்டினாய்டுகள், தியோல்கள், டோகோஃபெரல்கள், குளுகோஸைனோலேட்கள் போன்ற சத்துக்கள் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகின்றன (1). மேலும் டிராகன் பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது அதிக கிளைகெமிக் அளவுகள் உள்ள உணவுகளை உண்டாலும் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் காக்க உதவுகிறது.

மருந்தியல் ஆராய்ச்சி இதழில், சர்க்கரை நோயாளிகளில் பொதுவாக ஏற்படும் பெருநாடி விறைப்பு காரணமாக ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தின் மீது பயனுள்ள விளைவை ஏற்படுத்த டிராகன் பழம் உதவுகிறது என்ற தகவல் பதிவிடப்பட்டுள்ளது.

நன்மை 2: இதய ஆரோக்கியம்

டிராகன் பழத்தை அடிக்கடி உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்தக்குழாய்கள் விறைப்புத் தன்மையுடன் இருப்பதை குறைக்க உதவுகிறது; இவ்விரண்டு முக்கிய விஷயங்களும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்க டிராகன் பழம் உதவும் என்பதை உறுதிப்படுத்துகிறது (2).

கூடுதலாக, இப்பழத்தில் உள்ள சரியான மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகளின் அளவு இதயத்தை ஆரோக்கியமான வடிவில் வைத்திருக்க உதவும்.

நன்மை 3: புற்றுநோய்

உடலில் புற்றுநோய் செல்கள் பெருக்கமடைவதை தடுக்க டிராகன் பழம் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கருத்து தெரிவிக்கின்றன. டிராகன் பழத்தில் லைகோபீன் எனும் என்சைம், வைட்டமின் சி, ஆன்டி கார்சியோனேஜிக் குணாதியங்களை கொண்ட கரோட்டின் எனும் சத்து போன்றவை அதிகம் காணப்படுகின்றன (3). இச்சத்துக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்க உதவுகின்றன.

சில குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுக்க உதவும் பாலிஃபினால்கள் எனும் சத்து, டிராகன் பழத்தின் தோல்களில் அதிகம் காணப்படுகின்றன.

நன்மை 4: கொலஸ்ட்ரால்

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை கொலஸ்ட்ரால் என்பதாகும்; உலக மக்கள் தொகையில் 39% மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களில் கொலஸ்ட்ரால் எனும் பிரச்சனை, 40% முதல் 37% வரை என்ற அளவில் அதிகம் காணப்படுகிறது; இதனால் ஒவ்வொரு வருடமும் 2.6 மில்லியன் மக்கள் இறந்து வருகின்றனர்.

சில வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வந்தால், அதுவும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்ப்பது உட்பட – ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டிராகன் பழம் முக்கிய பங்கு வைக்கிறது. கொலஸ்ட்ராலை குறைப்பது என்பது உடலில் உள்ள எல்லா கொழுப்புகளையும் அகற்றுவது என்று பொருளல்ல. ஏனெனில் உடலின் சரியான இயக்கத்திற்கு அன்சாச்சுரேட்டட் வகை சார்ந்த கொழுப்புகளும் அவசியம் தான்; டிராகன் பழ விதையில் உள்ள பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்புகள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் (4). டிராகன்  பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் அபாயகரமான LDL கொழுப்பு அளவுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

நன்மை 5: உடல் எடை மேலாண்மை

தினசரி, பிடித்த உணவுகளை உட்கொண்டு, அதனுடன் டிராகன் பழத்தை எடுத்துக் கொண்டு வருவதன் மூலம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். தொடர்ந்து அதிக மாதங்களுக்கு எடையை குறைக்க உதவும் டயட் உணவுகள், எடையை குறைப்பதற்கான காத்திருப்பு போன்றவை உடல் எடை குறைப்பு செயல்பாட்டின் மீது வெறுப்பையே ஏற்படுத்திவிடும்; ஆனால், டிராகன் பழம் அல்லது டிராகன் பழச்சாறு போன்றவற்றை எடுத்துக் கொண்டால் எளிதில், விரைவில் எடையை குறைக்க முடியும்.

இவை தவிர, இப்பழம் ஒரு சுவையான நொறுக்குத்தீனியாக, குறைந்த கலோரி அளவு கொண்டதாக இருக்கும். இப்பழத்தில் 90% நீரும், அதிக நார்ச்சத்தும் இருப்பதால், அவை உடலை அதிக நேரம் பசியின்றி வைத்திருக்க, அதிகம் உணவு உண்ணுவதை தடுக்க உதவுகின்றன (5).

நன்மை 6: வயிறு சார்ந்த பிரச்சனைகள் (செரிமானம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள்)

டிராகன் பழம் எனும் இந்த குறிப்பிடத்தக்க பழம் செரிமான குறைபாடு, மலச்சிக்கல் போன்ற எல்லா விதமான தீவிர வயிறு சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். மலச்சிக்கல் பிரச்சனையால் பாடுபடும் மக்களுக்கு நிவாரணம் அளிக்க நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த இப்பழம் அதிகம் உதவும் (6). டிராகன் பழத்தில் உள்ள இச்சத்துக்கள் மலம் எளிதில் வெளியேற உதவி, உணவு செரிமான உறுப்புகள் வழியாக சிக்கலின்றி செரிமானமாக உதவுகிறது; மேலும் டிராகனில் உள்ள நார்ச்சத்து நாள்கணக்காக சேர்ந்து காணப்படும் மலத்தை வெளியேற்றி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறைபாடை –  Irritable Bowel Syndrome (IBS) குணப்படுத்த உதவுகிறது.

நன்மை 7: ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ் என்பது எலும்பு மூட்டுகளில் தீவிர வலி, எரிச்சல், நகர இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்பட காரணமாக திகழ்கிறது; டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் இந்த தீவிர நோயையும் சரி செய்ய இயலும்.

டிராகன் பழம் ஆர்த்ரிடிஸ் வலியை சரிப்படுத்த உதவுவதால், இப்பழத்தை அழற்சி எதிர்ப்பு பழம் என்று அழைப்பர் (7). ஆகவே மருத்துவ குணம் நிறைந்த இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள முயலுங்கள், ஆர்த்ரிடிஸ் வலியில் இருந்து முழுமையான நிவாரணம் பெறுங்கள்.

நன்மை 8: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

டிராகன் பழத்தில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது; மேலும் இப்பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள், அத்தியாவசிய கூறுகள், திடமான வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களான நியாசின், வைட்டமின் பி1, பைட்டோஅல்புமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு  போன்றவை நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டு திகழ்கின்றன.

நன்மை 9: கர்ப்ப காலத்திற்கு நல்லது

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கண்டிப்பாக தங்கள் உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்; இப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. பல பெண்களுக்கு நிறைமாதத்தில் ஏற்படும் இரத்தசோகை பிரச்சனையை இப்பழம் உட்கொள்வதன் மூலம் தவிர்க்க முடியும். டிராகன் பழத்தில் உள்ள இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவுகளை சரியாக வைக்க உதவுகிறது மற்றும் வளரும் கருவின் உடலிலும் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல தேவையான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

மேலும் இப்பழத்திலுள்ள கார்போஹைட்ரேட் கர்ப்பிணி பெண்களுக்கு ஆற்றல் அளிக்க உதவுகிறது; கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் ஃபோலேட் சத்து, கருவின் உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவதோடு, குழந்தையின் நரம்பு மண்டல குழாய்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் டிராகன் பழத்தை உட்கொண்டால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் செரிமான சிக்கலையும், மலச்சிக்கலையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.

நன்மை 10: பலமான எலும்புகள் மற்றும் பற்கள்

டிராகன் பழம் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்த்துக்களை கொண்டது; ஆகவே இது எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்த உதவும்.

இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் ஒன்றையொன்று அதிகம் சார்ந்தவை; கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், எவ்வித பல் குறைபாடுகளும் ஏற்படாது. இப்பழம் எலும்புகளின் அடர்த்தியை மற்றும் வேர்ப்பகுதியின் எடையை அதிகரித்து, எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.

நன்மை 11: டெங்கு நோயாளிகளுக்கு நல்லது

டெங்கு போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குணமடைய அதிக காலம் ஆகும்; நோய் தீவிரமாக இருந்து சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில் இறப்பு கூட ஏற்படலாம். ஒரு சாதாரண நபரின் உடலில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மைக்ரோ லிட்டர் அளவுக்கும் 150,000 – 450,000 என்ற அளவில் இருக்கும்; ஆனால் டெங்கு நோயாளிகளில் வெறும் 10,000 பிளேட்லெட்டுகள் மட்டுமே இருக்கும்.

இரத்த குழாய்களில் இரத்தம் கசிந்து, இரத்த உறைதல் ஏற்படுவதை தடுப்பது தான் பிளேட்லெட்டுகளின் முக்கிய பணி ஆகும்; இந்த குறைபாடு சரிசெய்யப்படவில்லை எனில் அது இரத்தக்கசிவு நோய் ஏற்பட காரணமாகலாம். டிராகன் பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் மற்றும் இப்பழத்திலுள்ள பலம் வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டு டெங்கு போன்ற தொற்று நோய்களை சரிசெய்யவும் முடியும்.

நன்மை 12: உடல் செல்களை பழுதுபார்க்கும்

டிராகன் பழத்தில் சில குறிப்பிடத்தக்க புரதங்கள், என்சைம்கள் உள்ளன; இவை உடல் செல்களை புதுப்பிக்கவும், செல்களை பழுது பார்க்கவும் உதவும்; இச்சத்துக்கள் எரிந்த உடல் காயங்கள், புண்களை குணப்படுத்தவும் உதவுகின்றன. டிராகன் பழம் மிகச்சிறந்த குணப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது.

நன்மை 13: மூச்சுக்குழாய் கோளாறுகள்

மூச்சுக்குழாய் கோளாறுகள் என்பது சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களால் ஏற்படும் ஆஸ்துமா, இருமல் போன்றவை ஆகும்; மூச்சுக்குழாய் கோளாறுகளை சரிசெய்ய உதவும் முக்கிய  விஷயம் வைட்டமின் சி ஆகும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், அது மூச்சுக்குழாய் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது.

நன்மை 14: ஹீமோகுளோபினை அதிகரிக்கும்

இரத்த சோகை என்பது பொதுவாக பெண்களில் அதிகம்  ஏற்படக்கூடிய நோய்க்குறைபாடு ஆகும்; இதனை அலட்சியம் செய்யாமல் இக்குறைபாட்டினை தீர்க்க உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், ஹீமோகுளோபின் அளவுகள் குறைந்து கொண்டே வந்தால், அது சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி விடலாம்.

இரத்தசோகையை சரி செய்ய ஒரு மிகச்சிறந்த மருந்து டிராகன் பழம் ஆகும்; இதில் இருக்கும் இரும்புச்சத்து, அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் இரும்புச்சத்தில் 8% சதவிகிதத்தை வழங்குகிறது. இப்பழத்தில் காணப்படும் வைட்டமின் சி சத்துக்கள் உணவுப்பொருட்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகின்றன.

நன்மை 15: பிறவி கண் அழுத்த நோயை தடுக்கும்

பிறவி கண் அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்க  டிராகன் பழம் உதவுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இப்பழத்தில் மனிதர்களின் கல்லீரலில் மட்டுமே காணப்படும் ஒரு புரதமான, P450 சைட்டோகுரோமை தடுக்கும் சக்தி நிறைந்துள்ளது மற்றும் இது நுரையீரல், சிறுநீரகத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இப்புரதம் பிறவி கண் அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைத்து, அந்நோயை தடுக்கிறது (8).

நன்மை 16: பசி உணர்வை அதிகரிக்கும்

பசியே எடுக்கவில்லையா? அது உடலில் சில நோய்கள் ஏற்பட்டிருப்பதை குறிக்கும்; காய்ச்சல், இரத்தசோகை போன்ற நோய்கள் உடலில் உண்டானால், அவை பசி உணர்வை அழித்துவிடும். பசி உணர்வே ஏற்படாமல் தவிக்கும் மக்களுக்கு உதவ ஒரு அற்புத பழம் உள்ளது, அது தான் டிராகன் பழம் ஆகும்.

டிராகன் பழம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை போக்கி, பசி உணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

நன்மை 17: கண் பார்வையை மேம்படுத்தும்

மங்கலான பார்வை மற்றும் கண்களின் பின்புறத்தில் வலியை அனுபவிக்கும் நபர்கள், கண்டிப்பாக டிராகன் பழத்தை தங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பழம் கண்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்; இதை நிகழ்த்த டிராகன் பழத்திலுள்ள பீட்டா கரோட்டின், பிற அத்தியாவசிய தாவர நிறமிகள் போன்ற சத்துக்கள் உதவுகின்றன. டிராகன் பழத்திலுள்ள சத்துக்கள் கண்களை தீங்கு விளைவிக்கும் இறந்த – தேவையற்ற செல்களிடம் இருந்து காத்து, கேடராக்ட், மாகுலர் சிதைவு போன்ற கண் தொடர்பான நோய்கள் எதுவும் ஏற்படாமல் காக்க உதவுகின்றன.

நன்மை 18: மூளையின் இயக்கத்தை அதிகரிக்கும்

ஒட்டுமொத்த மனித உடலின் இயக்கமும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் அமைந்துள்ளது என்பது எல்லோரும் சந்தேகம் அன்றி அறிந்த உண்மையாகும். உடல் உறுப்புகள் சரியாக இயங்க வேண்டும் எனில், உறுப்புகளுக்கு போதுமான அளவு ஓய்வு அளித்திருக்க வேண்டியது அவசியம்.

டிராகன் பழம், நம் உடலில் RBC அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது; இதிலுள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் மூளையில் சேதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இந்த ஊட்டச்சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் இயக்கத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி, மூளையின் இயக்கத்தை அதிகரிக்க உதவும்.

டிராகன் பழம் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள்- Skin Benefits of Dragon Fruit in Tamil

விசித்திரமான தோற்றம் கொண்ட இந்த டிராகன் பழம் சருமத்திற்கு அதீத பயன்களை அளிக்கிறது; தீவிர சூரிய வெப்பம், எரிச்சல், முகப்பரு போன்ற நிலைகளில் இருக்கும் சருமத்தை காத்து, சருமத்தை ஆரோக்கியமானதாக மாற்ற இப்பழம் உதவுகிறது. டிராகன் பழம் தோலிற்கு வழங்கும் நன்மைகள் என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

நன்மை 1: முதுமையை எதிர்த்து போராடும்

சுருக்கங்கள், தொங்கும் தோல், சருமத்தில் காணப்படும் கோடுகள், பொலிவின்மை போன்றவை வயதாவதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும். இந்த மாற்றங்கள் இள வயதிலேயே ஏற்படுகிறது எனில், அது சருமத்தின் ஆரோக்கியம் குன்றியிருப்பதை உணர்த்துகிறது அல்லது தவறான அழகு சாதன பொருட்கள் பயன்பட்டால் தோலின் ஆரோக்கியம் கெட்டுவிட்டிருப்பதை உணர்த்துகிறது.

உடல் செல்களில், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் பாதிப்பால் வயதாகுதல் ஏற்படலாம்; இதனை சரி செய்ய பல இயற்கை வழிகள் உள்ளன. அந்த வகையில் டிராகன் பழத்தை பயன்படுத்தி முதுமையை எப்படி எதிர்த்து போரிடுவது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

இந்த அருமையான பழம் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டது; இந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் இறந்த தேவையற்ற செல்களை எதிர்த்து போராட கூடியது (9). இப்பழத்தை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் இளமையான, மென்மையான சருமத்தை பெறலாம். சோர்வடைந்த சருமம், சுருக்கங்கள், கோடுகள் கொண்ட சருமத்தை சரி செய்ய கீழ்க்கண்ட முறையை வாரம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.

தேவையான  பொருட்கள்

½ டிராகன் பழம்

1 மேஜைக்கரண்டி யோகர்ட்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து, மிருதுவான பேஸ்ட் தயாரித்து கொள்ள வேண்டும்.
  2. இப்பேஸ்ட்டில் யோகர்ட்டை கலந்து கொள்ளவும்.
  3. இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. மிதமான சூடு கொண்ட நீர் கொண்டு முகத்தை கழுவி மிருதுவான துண்டு கொண்டு முகத்தை துடைக்கவும்.
  5. இம்முறையை இரண்டு மாதங்களுக்கு வாரம் ஒருமுறை என செய்து வந்தால், முதுமையான தோற்றம் முற்றிலும் மறைந்து, இளமையான சருமம் கிடைக்கும்.

நன்மை 2: சூரிய வெப்பத்தால் எரிச்சலடைந்த சருமத்தை இதமாக்கும்

சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் பல காரணிகள் பங்கு வகித்தாலும், முதன்மை காரணமாக திகழ்வது சூரிய வெப்பம் ஆகும். சூரிய வெப்பத்தினால் தோலில் ஏற்பட்ட எரிச்சல், தடிப்புகள், சிவந்து போன சருமம் போன்றவற்றை இயற்கையான முறையில் சரிசெய்ய முடியும். டிராகன் பழத்தினால் செய்த பேஸ்ட் தோலில் ஏற்படும் அழற்சியை போக்கவும், சருமத்தில் ஏற்பட்ட சிவப்பு தடிப்புகளை சரிசெய்யவும் உதவும்.

டிராகன் பழத்தில் அற்புதமான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது; வைட்டமின் ஈ மற்றும் சி ஆகிய இரு சத்துக்களும் சருமத்தை புற ஊதா கதிர்களின் தாக்கத்தில் இருந்து காக்க உதவும்; மேலும் சூரிய வெப்பத்தால் ஏற்பட்ட எரிச்சலை இதமாக்கவும் உதவும் (10).

தேவையான  பொருட்கள்

¼ டிராகன் பழம்

1 வைட்டமின் ஈ மாத்திரை

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. டிராகன் பழத்தை அறுத்து அதன் சதையை எடுத்து கூழாக்கி கொள்ளவும்.
  2. டிராகன் பழ கூழில் வைட்டமின் ஈ மாத்திரையை உடைத்து சேர்த்து கொள்ளவும்.
  3. சூரிய வெப்பம் தாக்கிய சரும பகுதியில் இக்கலவையை தடவி, 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி, சருமத்தை காய வைக்கவும்.
  5. இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நன்மை 3: முகப்பருவை குணப்படுத்தும்

பரு என்பது எண்ணெய்ப்பசை கொண்ட சருமத்தில் அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை மற்றும் இது பூப்படையும் காலத்திலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனை. இதனை சரிசெய்ய பலரும் கடைகளில் கிடைக்கும் செயற்கை அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு; இதனால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, கட்டாயம் பக்க விளைவு கிடைக்கும்.

முகப்பருவை சரி செய்ய பல்வேறு இயற்கையான வழிமுறைகள் உள்ளன; அவற்றில் ஒன்றான டிராகன் பழத்தை பயன்படுத்தினால் முகப்பருவை எளிதில் போக்கி விடலாம். இப்பழத்திலுள்ள வைட்டமின் சி முகப்பருக்களை குறைத்து, அவற்றை போக்க பெரிதும் உதவும் (11), (12).

டிராகன் பழத்தை உபயோகித்து முகப்பருவை போக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான  பொருட்கள்

¼ டிராகன் பழம்

3 – 4 காட்டன் பஞ்சுகள்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. டிராகன் பழச்சதையை வெளியே எடுத்து, அதை மிருதுவான பேஸ்ட்டாக்கி கொள்ளவும்.
  2. காட்டன் பஞ்சை அப்பேஸ்ட்டில் நனைத்து, முகப்பரு உள்ள இடங்களில் தடவவும்; காட்டன் பஞ்சை பயன்படுத்துவதன் மூலம்  முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் சருமத்தின் பிற பகுதிகளுக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.
  3. தடவிய கலவையை 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் கழுவி விடவும்.
  4. இச்செய்முறையை வாரம் இருமுறை செய்தால் பருக்கள் இல்லாத சருமத்தை பெறலாம்.

நன்மை 4: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் தரும்

ஆரோக்கியமான மற்றும் மிளிரும் சருமத்தை பெறுவது மிகவும் கடினமான வேலை ஆகும்; என்ன உணவுகளை உண்கிறோம், எத்தகைய செயல்களை செய்கிறோம் என்பதை கவனித்து வந்தாலே தோலின் தோற்றத்தில் நல்ல மாற்றங்களை பார்க்க முடியும்.

உணவு முறையில் டிராகன் பழத்தை சேர்த்து கொள்வது சருமத்திற்கு நன்மை பயக்கும்; காலை வேளைகளில் ஒரு கப் டிராகன் பழச்சாறை பருகி நாளை தொடங்குவது மிகவும் அற்புதமான மாற்றங்களை தோலில் ஏற்படுத்தி, சருமத்தின் தன்மையை மேம்படுத்தும்; மேலும் சருமத்தை பொலிவாக்க உதவும்.

டிராகன் பழம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்களை கொண்டுள்ளதால், அது தோலில் காணப்படும் இறந்த – தேவையற்ற செல்களை நீக்க உதவும்; மேலும் இச்சத்துக்கள் தொங்கும், சோர்வடைந்த சருமத்தை சரியாக்க உதவும். டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பிரகாசமாக்க உதவும்.

நன்மை 5: ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

டிராகன் பழம் அதிகப்படியான நீர்ச்சத்தை கொண்டுள்ளதால், அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்; குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் இப்பழத்தை உண்ணலாம் (13).

ஆகவே குளிர்காலங்களில் டிராகன் பழத்தை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது, குளிர் காலத்திலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

டிராகன் பழம் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அளிக்கும் நன்மைகள் – Hair Benefits of Dragon Fruit in Tamil

திடமான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெறுவது என்பது எளிதான காரியம் அல்ல; பல புதிய நிறுவன தயாரிப்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் கூட எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். முயன்று பார்த்த மக்களுக்கு உண்மை என்ன என்பது நன்கு விளங்கும்; பல முறை தோல்வியை சந்தித்த பின்னர் கூட ஆரோக்கியமான தலைமுடியை பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? ஆம் எனில், ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவும் எளிய முறையை பற்றி இங்கு படியுங்கள்.

நன்மை 1: நிறமூட்டப்பட்ட தலைமுடியை சரிப்படுத்தும்

இக்காலத்தில் ட்ரெண்ட், ஸ்டைல் என்று கூறி அழகாக, கருப்பாக இருக்கும் தலைமுடியை கலர் செய்து கொள்ளும் பழக்கம் எல்லா வயதினரிடமும் காணப்படுகிறது; சிலர் நரை முடி போன்ற இதர கூந்தல் பிரச்சனைகளை மறைக்கவும் முடிக்கு நிறமூட்டுகின்றனர். ஆனால், இவர்கள் எல்லோரும் இவ்வாறு முடியை கலர் செய்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் அபாயங்கள் பற்றி மறந்து விடுகின்றனர். முடியை கலர் செய்ய பயன்படுத்தப்படும் நிறமூட்டியில் கலந்திருக்கும் இரசாயனங்கள் தலைமுடியின் வேர் வரை சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உண்டு. ஆகவே இந்த குறைபாட்டை சரிசெய்ய, கலர் செய்த முடியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து ஆரோக்கியமானதாக மாற்ற டிராகன் பழத்தை எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்.

டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் மீது நன்கு வேலை செய்து, முடியை – கூந்தலின் தன்மையை சரிப்படுத்தி கூந்தலை ஆரோக்கியமானதாக மாற்ற உதவுகிறது (14).

தேவையான  பொருட்கள்

1 டிராகன் பழம்

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. டிராகன் பழத்தின் சதையை வெட்டி எடுத்து, அதை மிருதுவான பசை போன்று அரைத்து கொள்ளுங்கள்.
  2. இப்பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவவும்.
  3. தலைமுடியை 15-20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைத்து, பின்னர் இலேசான ஷாம்பு கொண்டு அலசவும்.
  4. வாரம் ஒருமுறை இந்த முறையை செய்து வந்தால், நல்ல பலன்களை பெற முடியும்.

நன்மை 2: ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்

டிராகன் பழம் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், கூந்தலின் சோர்வான தோற்றத்தை போக்கி பொலிவை ஏற்படுத்த உதவும்; இத்தகைய மிளிரும் கூந்தலை பெற கொஞ்சம் புளிப்பான, வித்தியாச சுவை கொண்ட டிராகன் பழச்சாறை குடிக்க வேண்டும். டிராகன் பழச்சாறை குடிக்க விருப்பமில்லை எனில், டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க் போன்று தயாரித்து நேரடியாக உச்சந்தலையில் தேய்த்து கொள்ளலாம். இவ்வாறு டிராகன் பழத்தை ஹேர் மாஸ்க்காக உச்சந்தலைக்கு தடவிய பின் 20 நிமிடங்கள் ஊற வைத்து, சாதாரண நீர் கொண்டு முதலில் கழுவவும்; அதன் பின் இலேசாக ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இம்முறையை தினம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; இதனை சில மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடியின் தன்மையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை காணலாம். டிராகன் பழச்சாறை பருகி வந்தால் கூட இதே பலன்களை பெற முடியும்.

ஏன் இது வேலை செய்யும்?

டிராகன் பழங்கள், குறிப்பாக சிவப்பு டிராகன் பழங்களில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்டுகள், என்சைம்கள் இருப்பதால், அவை தலைமுடியை மிருதுவாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற உதவும்.

டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Dragon Fruit Nutritional Value in Tamil

டிராகன் பழத்தில் ஆச்சரியம் அளிக்கக்கூடிய அளவுக்கு பைட்டோ ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் அடங்கியுள்ளன; இப்பழம் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், கரோட்டின், புரதங்கள் போன்றவை நிறைந்துள்ளன. டிராகன் பழத்தில் உள்ள ஜீரோ கார்போஹைட்ரேட், தையமின் சத்துக்கள் உணவு பொருட்களை எளிதில் செரிமானமடைய செய்ய உதவும். இப்பழத்தில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன; இவை ஆரோக்கியத்திற்கு அதீத நன்மைகளை அளிக்கக்கூடியவை. டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு என்ன என்று இந்த அட்டவணையில் பார்க்கலாம்.

100 கிராம் டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு  
நியமம்  ஊட்டச்சத்து மதிப்பு 
மொத்த கொழுப்பு 0.61 கிராம்
புரதம் 0.229 கிராம்
ஆஷஸ் 0.68 கிராம்
நீர் 83.0 கிராம்
பொட்டாசியம் 436 மில்லி கிராம்
கால்சியம் 8.8 கிராம்
கொலஸ்ட்ரால் 0 மில்லி கிராம்
நார்ச்சத்து 0.9 கிராம்
கலோரிகள் 99

டிராகன் பழத்தை பயன்படுத்துவது எப்படி? – How to Use Dragon Fruit in Tamil

எந்தவொரு பழத்தையும் சாப்பிட்ட உடன் உண்ணக்கூடாது; டிராகன் பழம், கொய்யா பழம் போன்ற அதிக நார்ச்சத்து கொண்ட பழங்களை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. டிராகன் பழத்தை இரண்டாக அறுத்து, உள்ளே இருக்கும் வெள்ளை அல்லது சிவப்பு சதையை உட்கொள்ள வேண்டும்.

டிராகன் பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி மற்றும் சேமித்து வைப்பது எப்படி? – How to Select and Store Dragon Fruit in Tamil

டிராகன் பழங்கள் எளிதில் கிடைக்காத காரணத்தினால், அவை கிடைக்கும் பருவ காலங்களில் தவறாமல் அவற்றை வாங்கி உட்கொள்ளலாம். அந்நேரங்களில் ஓரிரு வாரங்களுக்கு இப்பழத்தை குளிர்சாதன பெட்டியின் உதவியுடன் சேமித்து வைத்தும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஒரே மாதிரியான நிறம் கொண்ட, புள்ளிகள் அல்லது பழுப்பு நிறம் ஏற்படாத பழத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். குளிர்ந்த இடத்தில் இப்பழத்தை சேமிக்கவில்லை எனில், பழங்கள் அழுகிவிட வாய்ப்புண்டு.

டிராகன் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Dragon Fruit in Tamil

இயற்கையில் உருவான அல்லது செயற்கையில் உருவான எந்த ஒரு பொருளுக்கும் நன்மை, தீமை என்ற இரு குணம் இருக்கும்; இந்த கூற்று டிராகன் பழத்திற்கும் பொருந்தும். இப்பொழுது டிராகன் பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்:

  • எந்த ஒரு உணவையும் அல்லது பிற பொருளையும் அளவோடு தான் உட்கொள்ள வேண்டும்; அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு தான். டிராகன் பழத்தில் உள்ள ஃப்ரெக்டோஸ் எனும் சத்து இருப்பதால், அதை அதிகம் உட்கொள்வதை தவிருங்கள்; இல்லையேல் இது உடல் எடை இழப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
  • டிராகன் பழத்தின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கும் அபாயம் இருப்பதால், அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
Shipping Cost 0
Shipping Time Ready to ship in 4-7 Business Days
Location

No reviews found.

No comments found for this product. Be the first to comment!